பிரபல நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் தற்போது வெங்கட பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் அரசியல்வாதியாக விஜய் இந்த பிறந்த நாளானது அவரது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஸ்பெஷலான பிறந்தநாள் ஆகும். எனவே இதனை கூடுதல் ஸ்பெஷலாக மாற்ற விஜயின் பகவதி, அழகிய தமிழ்மகன், சச்சின், துப்பாக்கி, போக்கிரி, மாஸ்டர், வில்லு போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படமும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பகவதி
விஜய், ரீமாசென், ஜெய் ஆகியோரின் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பகவதி. இந்த படம் கடந்த 2002ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் தற்போது விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
அழகிய தமிழ்மகன்
கடந்த 2007 இல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் தான் அழகிய தமிழ் மகன். இந்த படத்தை பரதன் இயக்கியிருந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். இதில் விஜய், ஸ்ரேயா, நமீதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் தான் வில்லு. கடந்த 2009 இல் வெளியான இந்த படத்தை பிரபுதேவா இயக்கியிருந்த நிலையில் இந்த படம் 2024 ஜூன் 21 அன்று விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சச்சின்
விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 இல் வெளியான படம் சச்சின். இந்த படத்தில் இடம்பெற்ற காமெடிகளும் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் ஏற்கனவே மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது விஜயின் 50 வது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
போக்கிரி
கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான படம் தான் போக்கிரி. இதில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் மாஸான லுக்கில் மிரட்டி இருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூன் 21 அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படமும் விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என்று நம்பப்படுகிறது.