Homeசெய்திகள்சினிமாமீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!

மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!

-

மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் இரண்டு மகள்களுமே திரைத் துறையில் இயக்குனராக உருவெடுத்துள்ளனர். அந்த வகையில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் (பிப்ரவரி 9) நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் விஐபி 2 திரைப்படத்தையும் ரஜினி நடிப்பில் கோச்சடையான் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் ரஜினி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் இவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் தான் நடிகர் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம்.மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்! இதற்காக பத்து நாட்கள் கால்ஷீட் தந்துள்ளாராம் ரஜினி. மேலும் இந்த படத்தை தாணு தயாரிக்க இருப்பதாகவும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரித்து வருவதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ