சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மழையில் நனைகிறேன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் மழையில் நனைகிறேன். இந்த படத்தினை ராஜ் ஸ்ரீ வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சுரேஷ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். காதல் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரஜினி, மழையில் நனைகிறேன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
Superstar #Rajinikanth sends his blessings to the #MazaiyilNanaigiren team for making a big theatrical success which is releasing on Dec 12th !!#MazaiyilNanaigirenFromDec12
Dir by #TSureshkumar@RajsreeOffl #AnsonPaul @reba_monica @vishnupsd1 @ZeeMusicCompany @sureshchandraa pic.twitter.com/tV3WkUu9BD— Rajshree Ventures (@RajsreeOffl) December 7, 2024
இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவில், “வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி திரைக்கு வரும் மழையில் நனைகிறேன் படம் மாபெரும் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
நடிகர் ரஜினி கடைசியாக வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.