சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74ஆவது பிறந்தநாள் இன்று (2024, டிசம்பர் 12).
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். ஆம் 80 தொடங்கி 2K கிட்ஸ் வரை எல்லோருக்கும் ஃபேவரைட்டான ஒரு ஸ்டார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
இவர் பெயரில் மட்டுமல்ல ஸ்டைலிலும் காந்தம் உள்ளது போல. இத்தனை வயது கடந்தும் துளியும் குறையாத எனர்ஜி இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். சின்ன சின்ன கண் அசைவுகளால் கூட ரசிகனை கண்கலங்க வைக்க முடியும் என்ற மேஜிக்கை அசால்டாக செய்யக்கூடியவர் தான் ரஜினிகாந்த். இவருக்கு போட்டியாக நடித்த பல நடிகர்கள் வயது மூப்பின் காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இன்னமும் நம்பர் ஒன் இடத்திற்கு சொந்தக்காரர் என்னும் பட்டத்தை தன்னுடைய படத்தின் வசூல் மூலம் சொல்லி அடிப்பவர். இளம் இயக்குனர்களின் கதைகளுக்கு ஏற்றவாறு மெனக்கெட்டு நடித்து தினம் தினம் அப்டேட்டாகி கொண்டிருப்பவர். ஜெயிலர் 2, கூலி என அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வசூலில் புது சாதனைகளையும் படைக்க உள்ளார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கண்டங்கள் கடந்து இவரைக் கொண்டாடும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு நீண்ட ஆயுளோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகை ஆள நாமும் மனதார வாழ்த்துவோம்.