Homeசெய்திகள்சினிமாசூப்பர் ஸ்டாருக்கு இவ்ளோ மோசமான டிசைனா? கேலிக்கு ஆளாகும் லால் சலாம் போஸ்டர்!

சூப்பர் ஸ்டாருக்கு இவ்ளோ மோசமான டிசைனா? கேலிக்கு ஆளாகும் லால் சலாம் போஸ்டர்!

-

- Advertisement -

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் போஸ்டர் சமூகவலைத் தளங்களில் கேலிக்கு உள்ளாகி உள்ளது.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக நேற்று விமானத்தில் சென்னை பறந்துள்ளார் ரஜினி.

இந்நிலையில் இன்று காலை 12 மணிக்கு லால் சலாம் படத்திலிருந்து ரஜினிகாந்தின் போஸ்டர் வெளியானது. அதில் ரஜினிகாந்த் தலையில் தொப்பி உடன் முஸ்லிமாக காணப்பட்டார். மேலும் “மொய்தீன் பாலின் ஆட்டம் ஆரம்பம்” என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

மறுபுறம் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இவ்வளவு மோசமான வகையிலா டிசைன் செய்வது என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில்  போஸ்டரை கேலிக்கு உள்ளாக்கி வருகின்றனர். சாதாரணமாக ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்கள் கூட இதைவிட நன்றாக டிசைன் செய்வார்கள் என்ற வகையிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

laal-salaam-33.jpg

லால் சலாம் படத்தில் நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர்‌ ரகுமான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படம் கிரிக்கெட் கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு உருவாகி வருகிறது.

MUST READ