Homeசெய்திகள்சினிமாவேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்... அசத்தல் லுக்கில் ரஜினி, அமிதாப்... வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்… அசத்தல் லுக்கில் ரஜினி, அமிதாப்…
வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் எனும் புதிய படத்தை ஞானவேல் இயக்கி வருகிறார். இதில், ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார், லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, புதுச்சேரி, ஆந்திரா, என மாறி மாறி நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் ரிலீஸ் என அறிவித்த பின்பும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது மே 15-ம் தேதிக்கு மேல் தான் படப்பிடிப்பு முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன