வரலட்சுமியின் திருமண கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்பு
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி படத்தின் மூலம் கவனம் பெற்ற வரலட்சுமி, பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இத்திரைப்படத்தின் வரலட்சுமியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார். இதன் மூலம் நடிகை வரலட்சுமிக்கு அடுத்தடுத்து வில்லியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. தமிழில் விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். தமிழ் மட்டுமன்றி அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப் நட்சத்திரங்களின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்
இதனிடையே, வரலட்சுமிக்கும், அவரது காதலரும் தொழில் அதிபருமான நிகேலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. புது ஜோடியின் திருமண கொண்டாட்டம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். அவர் மட்டுமன்றி த்ரிஷா, விக்ரம் பிரபு, மீனா, பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, விஷ்ணு விஷால், பிரபுதேவா, நடிகை வித்யூலேகா ராமன் என பலரும் கலந்து கொண்டு புது ஜோடியை வாழ்த்திச் சென்றனர்.