Homeசெய்திகள்சினிமாஎன் தம்பிக்கும் ஆதரவு கொடுங்கள்... நேசிப்பாயா பட நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா நெகிழ்ச்சி... என் தம்பிக்கும் ஆதரவு கொடுங்கள்… நேசிப்பாயா பட நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா நெகிழ்ச்சி…
கடந்த 2011- ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணு வர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். இதையடுத்து, அஜித் நடிப்பில் வெளியான பில்லா என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாராவை வைத்து ஆரம்பம் என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.“
இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் திரும்பிய விஷ்ணு, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் இயக்கி இருக்கிறார். நேசிப்பாயா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தில் சரத்குமார், கல்கி, பிரபு, ராஜா , குஷ்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வௌியானது. நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேசிப்பாயா படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ ஆகாஷ் முரளியின் அண்ணா அதர்வாவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய அவர், தனது தம்பி சினிமாவில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது மிகவும் சந்தோஷமான தருணம். தனக்கும், தனது தந்தைக்கும் கொடுத்த ஆதரவை ரசிகர்கள் என் தம்பிக்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.