நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, இயக்குனர் அருண்குமார் குறித்து பேசி உள்ளார்.
இயக்குனர் அருண்குமார் தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் சேதுபதி திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அடுத்தது இவரது இயக்கத்தில் சித்தா திரைப்படம் வெளியானது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்து பேசப்பட்ட இந்த படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அந்த வகையில் சித்தா திரைப்படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் தான் அருண்குமாருக்கு, சியான் விக்ரமுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இருவரது கூட்டணியில் வீர தீர சூரன் திரைப்படம் உருவானது. இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
#Suraj Recent Interview
– After watching #Chithha, I wanted to work with this director.
– The film Chithha was very realistic, realistic and emotional.
– #VeeraDheeraSooran Sambavam#ChiyaanVikram
pic.twitter.com/ICIHAPfgTF— Movie Tamil (@MovieTamil4) March 18, 2025
அதற்காக ப்ரமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் அருண்குமார் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, சித்தா படம் பார்த்த பிறகு இயக்குனர் அருண்குமாருடன் பணிபுரிய விரும்பியதாகவும், அவருடைய சித்தா படம் மிகவும் எதார்த்தமாகவும், உணர்ச்சிவசப்பட வைத்ததாகவும் கூறியுள்ளார்.