Homeசெய்திகள்சினிமாதிரிஷா மீது அதிக அக்கறை கொண்ட அஜித்..... 'விடாமுயற்சி' குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்!

திரிஷா மீது அதிக அக்கறை கொண்ட அஜித்….. ‘விடாமுயற்சி’ குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்!

-

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் 62 வது படமாகும். திரிஷா மீது அதிக அக்கறை கொண்ட அஜித்..... 'விடாமுயற்சி' குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்!இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்தில் வில்லன்களாக அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து ரெஜினா போன்ற பலரும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அஜர்பைஜானில் பாதி படப்பிடிப்புக்கு மேல் நடைபெற்று முடிந்தது. பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் நேற்று (ஜூன் 30) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இந்த படம் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. திரிஷா மீது அதிக அக்கறை கொண்ட அஜித்..... 'விடாமுயற்சி' குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்!இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். ” விடாமுயற்சி படத்தில் அஜித் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர். அஜித் இந்த படத்தில் மனைவி திரிஷாவின் மீது அதிக அக்கறை கொண்ட கணவராக நடிக்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் திரிஷா ஜூன் 2 அல்லது ஜூன் 3இல் இணைவார். மற்றவர்களின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் படப்பிடிப்பு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தின் ஒன்று அல்லது இரண்டாவது வாரத்திற்குள் முடிந்து விடும். நிலப்பரப்பு இந்த படத்தில் முக்கியமான அங்கமாக இருப்பதால் நாங்கள் அஜர்பைஜானை தேர்வு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ