Homeசெய்திகள்சினிமாபூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ்நாட்டை நேசிப்பேன்... எம்.பி., நடிகர் சுரேஷ் கோபி நெகிழ்ச்சி... பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ்நாட்டை நேசிப்பேன்… எம்.பி., நடிகர் சுரேஷ் கோபி நெகிழ்ச்சி…
சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் கலக்கி வரும் மலையாள நட்சத்திரம் சுரேஷ் கோபி. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் தீனா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வௌியான ஐ படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார். அப்படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. 80-களில் தொடங்கி இன்று வரை அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் ஹீரோவாக மலையாளத்தில் பல படங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் சுரேஷ் கோபி. நடிப்பு மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளாக அவர் அரசியலிலும் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலையாளத்தில் சனல் வி தேவன் இயக்கத்தில் வராஹம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கேரளாவில் தான் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. அதனால் தமிழ்நாட்டை நேசிக்கிறேன். மேலும், அவரிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.