இயக்குனர் பாலா கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டவர். இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்களான நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இவ்வாறு இவர் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த போஸ்டரின் மூலம் இயக்குனர் பாலா மிகவும் வித்தியாசமான கதையை கையில் எடுத்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. பாலாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு அந்தப் படங்கள் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும். அதன்படி அருண் விஜய்க்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம், இயக்குநர் அண்ணன் பாலா அவர்கள்.
அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை… https://t.co/cJOiN3G3at
— sureshkamatchi (@sureshkamatchi) September 25, 2023
இந்நிலையில் இது குறித்து பனங்கான் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம், இயக்குநர் அண்ணன் பாலா அவர்கள். அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இன்று வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருன்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம். இனி உங்கள் கோணத்திற்கே விட்டுவிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.