Homeசெய்திகள்சினிமாகடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்..... அருண் விஜய்யை வாழ்த்திய சுரேஷ் காமாட்சி!

கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்….. அருண் விஜய்யை வாழ்த்திய சுரேஷ் காமாட்சி!

-

நடிகர் அருண் விஜய்யின் 46வது பிறந்தநாள் இன்று.

நடிகர் அருண் விஜய் சினிமாவில் கிட்டத்தட்ட 27 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்னும் படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து பாண்டவர் பூமி, இயற்கை, தவம் என பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். தன் படங்களுக்காக கடினமான உழைக்கக் கூடியவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் தான் அருண் விஜய். அந்த வகையில் தடையறத் தாக்க, குற்றம் 23, தடம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மிஷன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்..... அருண் விஜய்யை வாழ்த்திய சுரேஷ் காமாட்சி!அதேசமயம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேசமயம் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் அருண் விஜய் – க்கு
வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வணங்கான் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தே தீரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம். இன்னும் உழைத்து உயரமேற, வெற்றியாள வாழ்த்துக்கள் இன்றைய இனிய நாள் போல் வரும் எல்லா நாட்களும் இனிக்கட்டும்” என்று அருண் விஜய்யை வாழ்த்தியுள்ளார்.

MUST READ