நடிகர் சூர்யா தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் இசையமைக்கும் பணிகளை கவனிக்க இருக்கிறார். இந்த படம் கேங்ஸ்டர் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதம் 2ஆம் தேதி அந்தமானில் தொடங்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால் இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசரும் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களை படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் சூர்யா ஏற்கனவே வேல், பேரழகன், வாரணம் ஆயிரம், மாற்றான் போன்ற பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.