நடிகர் சூர்யா கங்குவா படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 45 வது படமான இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அறிவிப்பும் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படமானது கிராமத்து கதைக்களத்தில் ஃபேண்டஸி படமாக உருவாக இருக்கிறதாம். அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆர்.ஜே. பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (நவம்பர் 27) பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
#Suriya45 – Pooja is happening now at MaasaniAmman temple in Pollachi..🔥⭐ pic.twitter.com/COsPGFxoPN
— Laxmi Kanth (@iammoviebuff007) November 27, 2024
அதேசமயம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் பூஜை நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ஆர்.ஜே பாலாஜி, திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளியானது. எனவே தற்போது இந்த படத்தின் பூஜை மாசாணி அம்மன் கோவிலில் வைத்து நடைபெறுவதால் அந்த கதை தான் இந்த கதை என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.