Homeசெய்திகள்சினிமாஅடுத்த மாதம் தொடங்கும் 'சூர்யா 45' படப்பிடிப்பு.... லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்கையே அதிர வைத்தார். அடுத்த மாதம் தொடங்கும் 'சூர்யா 45' படப்பிடிப்பு.... லேட்டஸ்ட் அப்டேட்!இருப்பினும் சூர்யாவின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சூர்யா படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் 'சூர்யா 45' படப்பிடிப்பு.... லேட்டஸ்ட் அப்டேட்!சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே பரவ தொடங்கிவிட்ட நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 அடுத்த மாதம் (நவம்பர் மாதம்) தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ