Homeசெய்திகள்சினிமாகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா!

-

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா!இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 43 வது படமான புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. சூர்யா, சுதா கொங்கரா உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க இருப்பதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா!தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சூர்யா சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏனென்றால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் தற்போது சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

MUST READ