நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின்னர் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதே நாளில் வெளியாவதால் கங்குவா திரைப்படமானது 2024 நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்த வருகிறார். இந்த படத்திற்கு சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு ஊட்டி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
#Suriya arrived Kochi for #Suriya44 shooting 🎥pic.twitter.com/sLDLeIWjtw
— AmuthaBharathi (@CinemaWithAB) September 7, 2024
இந்த நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் சூர்யா கொச்சி வந்து இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஆக்சன் கலந்த கதை களத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி தரும் இந்த படத்தை நடிகர் சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார் என்பதும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.