Homeசெய்திகள்சினிமா'லக்கி பாஸ்கர்' பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா..... ஷூட்டிங் எப்போது?

‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா….. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

சூர்யா 46 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'லக்கி பாஸ்கர்' பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா..... ஷூட்டிங் எப்போது?

நடிகர் சூர்யா கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதேசமயம் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் சூர்யா, மலையாள இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. அதன்படி வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது மாருதி கார்களின் புகழ்பெற்ற 796CC என்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான கதையில் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா..... ஷூட்டிங் எப்போது?இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 மே மாதம் தொடங்கப்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சூர்யா 46 திரைப்படம் உடனடியாக தொடங்கும் என்றால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும்? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

MUST READ