நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து தனது 43 வது படமான புறநானூறு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போக அடுத்ததாக தனது 44வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்புகள் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சூர்யா, ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சூர்யா, கடந்த 2022-ல் வெளியான விலங்கு என்ற வெப் தொடரின் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜுடன் கூட்டணி அமைக்க இருக்கிறாராம். இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தினை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் அடுத்தடுத்து வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
பிரசாந்த் பாண்டிராஜ் விலங்கு வெப் தொடரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லிங்கம் என்ற வெப் தொடரை உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.