நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரின் மகனாக வலம் வந்த நடிகர் சூர்யா தனது கடின உழைப்பினால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் கைதட்டலை பெற்ற நிலையில் பலராலும் பாராட்டப்பட்டு இன்றுவரையிலும் பேசப்படுகிறது.
அடுத்ததாக சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தம் இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, புறநானூறு திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா , ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவினர்களின் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 2ஆம் தேதி அந்தமான் பகுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளும் அங்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னால் நடிகர் சூர்யா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -