நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் சூர்யாவின் 42 ஆவது படமாகும். இதனை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் ப்ரமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொச்சியில் நடைபெறும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டுள்ளார். அப்போது கேரள ரசிகர்கள் பலரும் சூர்யாவை காண கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். தனது ரசிகர்களிடம் சூர்யா, கையசைத்து, பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம், கேரள ரசிகர்களிடம், “என் சின்னத்தம்பி துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கேள்விப்பட்டேன். யாரும் பார்க்கவில்லை என்றால் அந்த படத்தையும் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.