சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ஆடியோ லான்ச் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை 2D நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமானது காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா இப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே வருகின்ற மே 1 அன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதிலும் கனிமா பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வார இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது. ஆகையினால் இந்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வார இறுதியில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.