சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 44 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி கடந்த மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கண்ணாடிப் பூவே எனும் முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இப்பாடல் எமோஷனலான பாடலாக இருக்கும்போது தெரிகிறது.