Homeசெய்திகள்சினிமாஆர்யாவை சந்தித்த சூர்யா... அயர்ன்மேன் நிகழ்ச்சிக்கு வாழ்த்து...

ஆர்யாவை சந்தித்த சூர்யா… அயர்ன்மேன் நிகழ்ச்சிக்கு வாழ்த்து…

-

‘எஃப்ஐஆர்’ படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவும் கௌதம் கார்த்திக்கும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ‘மிஸ்டர். எக்ஸ்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஸ்பை ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என்று தெரிவிக்கிறது. ‘கனா’ படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தன்வீர் மிர் மற்றும் பிரசன்னா ஜிகே முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராகவும் பணிபுரிகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மற்ற நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ஆர்யா சைக்கிளிங் மற்றும் மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வருவதோடு, இந்த போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடும் செய்து வருகிறார். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான அயர்ன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக சூர்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சி போலந்து நாட்டில் நடைபெற இருக்கிறது.

MUST READ