சூர்யாவின் அயன் திரைப்படம் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் அயன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கே.வி. ஆனந்த் எழுதி, இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூர்யா, தமன்னா, ஜெகன், பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதாவது தன்னுடைய சினிமா கேரியரில் அயன் திரைப்படத்தில் தான் மிகவும் எதார்த்தமாக, துருதுருவென நடித்து அசத்தியிருந்தார் சூர்யா. அதாவது ஒரு படத்தில் நடிப்பு, திரைக்கதை, சண்டை காட்சிகள், பாடல், எடிட்டிங் என அனைத்துமே சூப்பராக அமைந்திருந்தது என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக அயன் படத்தை சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்று வரையிலும் பேவரைட் படமாக இருந்து வருகிறது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்த படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் முக்கிய காரணமாகும். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை இப்பொழுது பார்த்தாலும் கூட கே.வி. ஆனந்தின் திரைக்கதை இன்னும் புதிது போலவே இருக்கக்கூடியது. இந்நிலையில் இந்த படம் (ஏப்ரல் 3) இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதனை ரசிகர்கள் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இப்படம் மீண்டும் திரைக்கு வந்தால் அதனை கொண்டாட ரசிகர்கள் இப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.