Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் ‘கங்குவா’?…. திரை விமர்சனம் இதோ!

-

கங்குவா படத்தின் திரை விமர்சனம்

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (நவம்பர் 14) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ!ஆக்சன் கலந்த ஃபேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. அதன்படி இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் இன்று வெளியாகி உள்ளது. சூர்யாவின் முதல் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கும் இந்த படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.

பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யாவிற்கு ஜூடா மூலம் தான் கடந்த காலத்தில் யார் என்பது தெரிய வருகிறது.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ! அதிலிருந்து கங்குவா கதை தொடங்க, ரோமானிய அரசு, வீரமும் இயற்கையும் விளைந்த பெருமாச்சி தீவை அடைய நினைக்கிறது. எனவே கொடுவாவிற்கு பணத்தாசை காட்டி பெருமாச்சி இன மக்களை நம்ப வைக்க அவ்வின மக்களும் கங்குவாவும் இணைந்து அவனை தீ வைத்து கொளுத்துகின்றனர். பின்னர் அவனது மனைவி மற்றும் மகனையும் கொல்ல நினைக்கின்றனர் அவ்வின மக்கள். ஆனால் கொடுவாவின் மனைவி தன் மகனை இனி உன் மகன் எனக் கூறி கங்குவாவிடம் தன் மகனை ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறி விடுகிறாள். இதன்பின் என்ன ஆனது? உதிரன் பெருமாச்சி மக்கள் மீது போர் தொடுப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதி கதை.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ!

அதாவது சிறுத்தை சிவா சூர்யாவிற்காக தயார் செய்த டைட்டில் கார்டு படத்தின் முதல் ஹைலைட்டாக அமைந்துள்ளது. அடுத்தது இந்த படத்தில் நடிகர் சூர்யா தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தன் தோளில் தாங்கிப் பிடித்திருக்கிறார். அதாவது ஸ்டைலிஷான தோற்றத்திலும் கங்குவாவாகவும் மிரட்டி இருக்கிறார். திஷா பதானி மற்றும் சூர்யா ஆகிய இருவருக்குமான யோலோ பாடல் மற்றுமொரு ஹைலைட் என்று சொல்லலாம். அதேசமயம் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் போன்ற படக்குழுவினரின் உழைப்புகள் கைத்தட்டல் பெறுகின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ!மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பலம் தந்துள்ளது. அதன்படி ஃபயர் சாங் ஃபயராக இருக்கிறது. குழந்தைக்கும் சூர்யாவிற்கும் இடையிலான எமோஷனல் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியுள்ளன . ஆக்ரோஷமான வில்லனாக மிரள வைக்கிறார் பாபி தியோல். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ!முதலையிடம் சண்டை போடும் காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கிறது. குறிப்பாக சூர்யாவின் சிக்ஸ் பேக் மற்றும் கேமியோ வில்லன் போன்றவை தெறிக்க விடுகின்றன. இருப்பினும் சூர்யா, கேமியோ வில்லன், பாபி தியோல் ஆகியோர்களை தவிர மற்ற கதாபாத்திரங்கள் வலுவாக வடிவமைக்கப்படவில்லை.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ! மேலும் சிறுத்தை சிவாவின் திரைக்கதை, நகரும் விதத்தில் தொய்வை உண்டாக்குகிறது. பழங்காலத்து கதை உண்மைத்தனமாக தெரிந்தாலும் நிகழ்காலத்தில் பிரான்சிஸ் காட்சிகள் செயற்கைத்தனமாக அமைந்திருப்பது படத்திற்கு பெரிய மைனஸ். வசனங்களும் ரசிகர்களைக் கவரும் படியாக அமையவில்லை. மொத்தத்தில் கங்குவா பிரம்மாண்டத்தின் உச்சம் தானே தவிர திரைக்கதையானது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

MUST READ