Homeசெய்திகள்சினிமாரஜினியுடன் மோதும் சூர்யா.....அதிரடியாக வெளியான 'கங்குவா' ரிலீஸ் தேதி!

ரஜினியுடன் மோதும் சூர்யா…..அதிரடியாக வெளியான ‘கங்குவா’ ரிலீஸ் தேதி!

-

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரஜினியுடன் மோதும் சூர்யா.....அதிரடியாக வெளியான 'கங்குவா' ரிலீஸ் தேதி!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து கோவை சரளா, யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய பகுதிகளின் அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் மோதும் சூர்யா.....அதிரடியாக வெளியான 'கங்குவா' ரிலீஸ் தேதி!இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி கங்குவா திரைப்படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ