Homeசெய்திகள்சினிமாசுறுசுறுப்பாக நடைபெறும் 'சூர்யா 46' பட வேலைகள்!

சுறுசுறுப்பாக நடைபெறும் ‘சூர்யா 46’ பட வேலைகள்!

-

- Advertisement -

சூர்யா 46 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சுறுசுறுப்பாக நடைபெறும் 'சூர்யா 46' பட வேலைகள்!

நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த வகையில் கங்குவா படத்திற்கு பிறகு ரசிகர்கள் பலரும் சூர்யாவின் ரெட்ரோ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் சூர்யா. சுறுசுறுப்பாக நடைபெறும் 'சூர்யா 46' பட வேலைகள்!அதற்கு முன்பாக நடிகர் சூர்யா, வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கப் போவதாகவும், இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அடுத்தது சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்றும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்க போகிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுறுசுறுப்பாக நடைபெறும் 'சூர்யா 46' பட வேலைகள்!அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் மே மாதத்தில் தொடங்க இருக்கிறதாம். இதற்கிடையில் படத்தின் பின்னணி இசைப் பணிகளுக்காக வெங்கி அட்லூரி மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகிய இருவரும் துபாய் பறந்துள்ளனர் என்று லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ