Homeசெய்திகள்சினிமாரோலக்ஸ் கதை ரெடி..... சூர்யா கொடுத்த முக்கிய அப்டேட்!

ரோலக்ஸ் கதை ரெடி….. சூர்யா கொடுத்த முக்கிய அப்டேட்!

-

லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கைதி மாஸ்டர் என பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இளைஞர்களின் ட்ரெண்டிங் இயக்குனர் ஆனவர் . இவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டில்லி, JD, பவானி, விக்ரம், டீனா என படத்தின் கதாபாத்திரங்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்டில் மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் தான் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் இருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம்.

சில நிமிடங்கள் படத்தில் இடம்பெற்று இருந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை திரையரங்கமே அதிரும்படி மாஸ் பண்ணி இருந்தார் நடிகர் சூர்யா. இதுவரை பார்த்திராத மிரட்டலான தொனியில் உருவாக்கப்பட்ட ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு தனி திரைப்படமே வேண்டும் என ரசிகர்கள் அப்போதே கேட்டிருந்தனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில்தான் சூர்யா ஒரு தனியார் திரைப்பட விருது விழாவில் பேசியபோது, ரோலக்ஸ் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட முழு நீளப்படத்திற்கான கதையை பற்றி ஏற்கனவே சூர்யாவிடம் லோகேஷ் கனகராஜ் பேசி இருப்பதாகவும் படமானது 150 நாட்கள் ஷூட் செய்யப்படும் திட்டமும் உள்ளது என அப்டேட் கொடுத்துள்ளார்.

இதன்படி LCU வில் ஒரு முக்கியமான படமாக இந்த ரோலக்ஸ் படமும் உருவாக வாய்ப்புகள் அதிகம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீசுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. லியோ படம் வெளிவந்த பின்னர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்களான கைதி 2, லியோ 2, ஆகியவற்றோடு ரோலக்ஸ் படமும் எதிர்காலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ