Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறனுக்கு முன் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணையும் சூர்யா!

வெற்றிமாறனுக்கு முன் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணையும் சூர்யா!

-

- Advertisement -

பிரபல நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா ப தானி நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது.3D அனிமேஷனாக உருவாகி வரும் இந்த படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ எனும் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாவத்திற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் ‘வாடிவாசல்’ படம் தாமதமாக தொடங்கும் என கூறப்படுகிறது.

எனவே இதற்கிடையில் ‘சூர்யா சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்றும் படத்தின் ஹிந்தி ரீமேக் படமான ‘ஆகாசம் நீ ஹத்து ரா’ இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா அதன் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு சூர்யாவின் நடிப்பில் மற்றொரு படத்தை இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

MUST READ