சூர்யா- ஜோதிகா தம்பதி தங்களின் 18ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சூர்யா – ஜோதிகா இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். தற்போது சூர்யா கங்குவா, சூர்யா 44 போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் தான் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தியா என்ற பெண் பிள்ளையும், தேவ் என்ற ஆண்பிள்ளையும் இருக்கின்றது. சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன் போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் சிறிய இடைவெளிகள் எடுத்துக்கொண்ட ஜோதிகாவும் தற்போது தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சூர்யா- ஜோதிகா இருவரும் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வரை இது குறித்த மற்ற அப்டேட்டுகள் வெளிவரவில்லை. மேலும் சமீபகாலமாக திரைத்துறையில் நடிகர்கள், நடிகைகள் பலர் திருமண உறவில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். ஆனால் அன்று முதல் இன்று வரை எவர்கிரீன் ஜோடியாக இருந்து வருகின்றனர் சூர்யா – ஜோதிகா தம்பதி. இந்நிலையில் சூர்யா – ஜோதிகா ஜோடி இன்று (செப்டம்பர் 11) தங்களின் 18 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே என்றுமே சூர்யா- ஜோதிகா இருவரின் திருமண வாழ்வில் சந்தோஷம் பெருக நாமும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.