கங்குவா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் சூர்யா, பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் வரலாற்றுப் பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. அதேசமயம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் கிளிம்ஸ் வீடியோ அதை தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தற்போது கங்குவா படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியான முன்னோட்ட வீடியோவில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் திருப்திகரமாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதனை மீண்டும் சரி செய்து படக்குழுவினர் டீசரை வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசரை பார்க்கும்பொழுது மிகவும் ரியலிஸ்ட்டிக்காக இருப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிர வைக்கும் இந்த டீசரில் சூர்யா வெறித்தனமான லுக்கில் காண்பிக்கப்பட்டுள்ளார். பாபி தியோல் மற்றும் சூர்யா மோதிக் கொள்ளும் காட்சி இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. பயங்கரமான ஆக்ஷன் காட்சிகள் காட்டப்படுகிறது. எனவே சிறுத்தை சிவா இந்த படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது