Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'புறநானூறு'.....ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

சூர்யாவின் ‘புறநானூறு’…..ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

-

சூர்யா 43 - புறநானூறு.....ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!“சூரரைப் போற்று” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சுதா கொங்காரா, சூர்யா கூட்டணியில் சூர்யாவின் 43வது படமான “புறநானூறு” திரைப்படம் உருவாக உள்ளது. துல்கர் சல்மான் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார். இது 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்றும், தன் கூட்டாளிகளால் பாதிக்கப்பட்ட கேங்ஸ்டர் ஒருவன் அவர்களைப் பழி வாங்கும் கதை என்றும் இப்படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. ஆனால் படத்தின் உண்மைக்கதை என்ன என்பது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போதுதான் தெரிய வரும். இதற்கிடையே படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படம் பற்றி தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சூர்யாவின் 'புறநானூறு'.....ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!அவர் கூறியதாவது “நானும், சுதா கொங்காராவும் இணைந்து பணியாற்றும் போது அப்படத்தின் இசை வேற லெவலில் அமைகின்றது. அதேபோல இந்த சூர்யா 43 படத்திலும் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது. சூர்யா 43 படமானது ஒரு ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்ட் ஆகவும், தனித்துவமாகவும் இருக்கும். படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா என எல்லோருடைய கதாபாத்திரமும் மிக முக்கியமாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார். இந்த கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த படம் என 5 பிரிவுகளில் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ