Homeசெய்திகள்சினிமாஉண்மையில் சூர்யாவின் 'புறநானூறு' கைவிடப்பட்டதா? தள்ளிப் போகிறதா?..... காரணம் இதுதானா?

உண்மையில் சூர்யாவின் ‘புறநானூறு’ கைவிடப்பட்டதா? தள்ளிப் போகிறதா?….. காரணம் இதுதானா?

-

நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளார்.உண்மையில் சூர்யாவின் 'புறநானூறு' கைவிடப்பட்டதா? தள்ளிப் போகிறதா?..... காரணம் இதுதானா? 2022 ல் வெளியான சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அதன்படி இப்படம் 1950 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. எனவே படப்பிடிப்பு விரைவில் தொடங்கிவிடும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நடிகர் சூர்யா சமீபத்தில் புறநானூறு படத்திற்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும் ரசிகர்களுக்கு சிறந்ததை வழங்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவித்திருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் புறநானூறு திரைப்படம் டிராப் ஆனதாக செய்திகள் பரவி வருகிறது. உண்மையில் சூர்யாவின் 'புறநானூறு' கைவிடப்பட்டதா? தள்ளிப் போகிறதா?..... காரணம் இதுதானா?இந்நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதற்கானகாரணம் தெரியவந்துள்ளது. அதாவது 1950ல் காங்கிரஸ் கட்சிதான் ஹிந்தியை திணித்தது. ஆகவே இந்த படத்தை இந்தக் கதையிலேயே உருவாக்கினால் காங்கிரசுக்கு எதிரான படமாக இப்படம் உருவாகிவிடும். நடிகர் சூர்யாவிற்கு இதில் உடன்பாடு இல்லையாம். எனவேதான் இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ