நானி, எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் புதிய வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஹாய் நான்னா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் சூர்யாவின் சனிக்கிழமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படத்திற்கு தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைக்கிறார். ஜி முரளி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் சாய்குமார் மற்றும் பலர் நடித்து மேலும் சாய்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ நடிகர் எஸ் ஜே சூர்யாவின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.