Homeசெய்திகள்சினிமாசுசீந்திரன் இயக்கும் '2K லவ் ஸ்டோரி'..... படப்பிடிப்பு நிறைவு!

சுசீந்திரன் இயக்கும் ‘2K லவ் ஸ்டோரி’….. படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 2K லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.சுசீந்திரன் இயக்கும் '2K லவ் ஸ்டோரி'..... படப்பிடிப்பு நிறைவு!

இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா, பாயும்புலி, மாவீரன் கிட்டு என பல படங்களை இயக்கினார். கடைசியாக இவரது இயக்கத்தில் உருவாகியிருந்த குற்றம் குற்றமே எனும் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்பிறகு சுசீந்திரன் எந்த ஒரு படமும் இயக்கவில்லை. ஆனால் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியிருந்த மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சுசீந்திரன். இந்நிலையில்தான் இவர் 2K லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ரொமான்டிக் காதல் சம்மந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இதில் அறிமுக நடிகர்கள் ஜெகவீர் மற்றும் மீனாட்சி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கும் '2K லவ் ஸ்டோரி'..... படப்பிடிப்பு நிறைவு!மேலும் இவர்களுடன் இணைந்து பால சரவணன், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ