சுழல் 2 ட்ரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான வெப் தொடர் தான் சுழல். இதனை புஷ்கர் – காயத்ரி எழுதி, இயக்கியிருந்த நிலையில் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரபரப்பான திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து புஷ்கர் – காயத்ரி, சூழல் வெப் தொடரின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் முதல் பாகத்தில் நடித்திருந்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சுழல் 2- The Vortex S2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த வெப் தொடரின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
The Vortex is heading towards you, but are you ready for it? 🌪️ Watch the #Suzhal Season 1 quick recap and gear up for Season 2!#SuzhalS2OnPrime TRAILER OUT TOMMORROW!!!#SuzhalS2#Suzhal2#SuzhalTheVortex#SuzhalOnPrime
@PrimeVideoIN @wallwatcherfilm @am_kathir @aishu_dil… pic.twitter.com/UHqcmoMRc5— Pushkar&Gayatri (@PushkarGayatri) February 18, 2025
அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து இந்த வெப் தொடரானது வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது சூழல் 2 வெப் தொடரின் ட்ரெய்லர் நாளை (பிப்ரவரி 19) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.