Homeசெய்திகள்சினிமாஅமேசான் பிரைமில் வெளியாகும் 'சுழல் 2'.... ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘சுழல் 2’…. ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!

-

- Advertisement -

சூழல் 2 வெப் தொடரின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அமேசான் பிரைமில் வெளியாகும் 'சுழல் 2'.... ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!

கடந்த 2022 ஆம் ஆண்டு சுழல் என்ற வெப் தொடர் வெளியானது. இதில் நடிகர் கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் இணைந்து பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர். புஷ்கர் – காயத்ரி எழுதி இயக்கியிருந்தார். பரபரப்பான கதைக்களத்தில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. அதன்படி இதற்கு சுழல் 2- The Vortex S2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்த நிலையில் இது 2025 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அமேசான் பிரைமில் வெளியாகும் 'சுழல் 2'.... ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!ஆனால் தற்போது சுழல் 2 வெப் தொடர் வருகின்ற பிப்ரவரி 28 அன்று அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுழல் 2 வெப் தொடரின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி சுழல் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ