Homeசெய்திகள்சினிமாயுவன் குரலில் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

யுவன் குரலில் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

ஸ்வீட் ஹார்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.யுவன் குரலில் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜோ திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் ரியோ ராஜ். அந்த வகையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவாகி வரும் ஸ்வீட் ஹார்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ். குமார் இயக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெகன் ராஜ்வேல் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். அடுத்தது இந்த படத்தில் ரியோ ராஜுடன் இணைந்து கோபிகா ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘Awsum Kissa’ எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ