Homeசெய்திகள்சினிமா12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹாலிவுட் செல்லும் நடிகை தபு

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹாலிவுட் செல்லும் நடிகை தபு

-

பிரபல நடிகை தபு, சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தபு. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். தமிழில் அஜித்குமாருக்கு ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இருப்பினும், அவர் தமிழில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அடுத்தடுத்து திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இந்தி சினிமா பக்கம் திரும்பிய தபு, அங்கு பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்திருக்கிறார். இவர் அண்மையில் இந்தியில் க்ரு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கரீனா கபூர், கிருதி சனோன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தென்னிந்திய மொழியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த திரைப்படம் தான் அலவைக்குந்தபுரமுலோ. இத்திரைப்படத்தில் அவர் அல்லு அர்ஜூனுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஹாலிவுட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க இருக்கிறார் தபு. இதற்கு முன்பாக நேம் சேக், லைஃப் ஆப் பை ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். தற்போது, டூன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தொடரின் 3-வது பாகத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

MUST READ