Homeசெய்திகள்சினிமாவிஜயிடம் கதை கூறியுள்ள கார்த்திக் சுப்புராஜ்🔥... தாறுமாறான கேங்ஸ்டர் படம் ஆன் தி வே!?

விஜயிடம் கதை கூறியுள்ள கார்த்திக் சுப்புராஜ்🔥… தாறுமாறான கேங்ஸ்டர் படம் ஆன் தி வே!?

-

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய்-க்கு கதை கூறியதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு பான் இந்தியா ஸ்டார் அங்கீகாரம் கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.

சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சௌத்ரியின் மகன்களான நடிகர்கள் ஜீவா மற்றும் சித்தன் ரமேஷ் இருவரும் பெரிய இயக்குனர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் விஜயிடம் கதை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ் “தளபதி விஜயை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்றால் எந்த மாதிரியான படம் இயக்குவீர்கள்” கேட்கப்பட்ட கேள்விக்கு தாறுமாறான ஒரு கேங்ஸ்டர் மூவியை நான் இயக்குவேன்” என்று தெரிவித்திருந்தார். தற்போது அது நிஜமாகி விடும் போல் தெரிகிறது.

MUST READ