Homeசெய்திகள்சினிமாபாகுபலி என் வாழ்வையே மாற்றியது... நடிகை தமன்னா உருக்கம்...

பாகுபலி என் வாழ்வையே மாற்றியது… நடிகை தமன்னா உருக்கம்…

-

- Advertisement -
வடக்கிலிருந்து வந்து தெற்கே ரசிகர்களின் மனதை வென்று கவனம் ஈர்த்த நடிகை தமன்னா. அன்றும், இன்றும், என்றும் கனவுக்கன்னி தமன்னா என்றே கூறலாம். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்மூலம் அவர் கோலிவுட் திரைக்கு அறிமுகம் ஆகினார். இப்படத்தில் அவர் வில்லியாக நடித்திருந்தார். இருப்பினும் கேடி திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் பெரும் ஹிட் அடிக்கவே தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்து தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கும் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், வெங்கடேஷ், சிரஞ்சீவி என அனைத்து டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் பக்கம் தமன்னா கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் தமிழில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இதனிடையே , நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இந்நிலையில், தொடக்கத்தில் பட வாய்ப்புகளுக்காக மற்ற நடிகைகள் போல அவதிப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், என் வாழ்வில் கேம் சேஞ்சர் என்றால் அது பாகுபலி திரைப்படம் தான். என் மீதான ரசிகர்களின் பார்வையை மாற்றியது அத்திரைப்படம் தான் என்றார்.

MUST READ