எனக்கும் ஒரு துணை தேவை… 48 வயதில் திருமணம் குறித்து பேசிய நடிகை நக்மா…
- Advertisement -

90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. இவரது நடிப்புக்கும், பேச்சுக்கும் பல கோடி ரசிகர்கள் இருந்தனர். 1990-ம் ஆண்டு இந்தியில் வெளியான பாஹி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நக்மா. தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் அவர் நடித்து வந்தார். இதையடுத்து, ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமாகினார். 1994-ம் ஆண்டு காதலன் திரைப்படம் வெளியானது. இதில், பிரபுதேவா மற்றும் நக்மா இருவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

காதலன் படத்தின் வெற்றி நக்மாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர காரணமாக அமைந்தது. இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு நக்மாவுக்கு கிடைத்தது. ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்த பாட்சா திரைப்படம் 1995-ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பெரிய தம்பி, பிஸ்தா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். சரத்குமார், கார்த்தி, சத்யராஜ், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்தார். கடந்த 2001-ம் ஆண்டு வெளியான அஜித்தின் சிட்டிசன் தான் அவர் நடித்த இறுதித் திரைப்படம். பின்னர் கோலிவுட் மட்டுமல்ல மொத்த திரை உலகிலிருந்தும் விலகிய அவர் அரசியல், குடும்ப வாழ்க்கை என பிசியாகி விட்டார்.

அவரது தங்கையும் நடிகையுமான ஜோதிகா மற்றும் ரோஷினி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 48 வயதாகும் நக்மா திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை. எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக வேண்டும். என் திருமணம் விரைவில் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.