Homeசெய்திகள்சினிமாவெற்றி நடித்த பகலறியான்... ஓடிடி தளத்தில் வெளியானது...

வெற்றி நடித்த பகலறியான்… ஓடிடி தளத்தில் வெளியானது…

-

தமிழ் சினிமாவில் மாபெரும் பொருட்செலவில் எடுக்கும் திரைப்படங்களே சில சமயங்களில் தோல்வியை தழுவும் நிலையில், பல நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் எதிர்பாராத வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளன. அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வெற்றி. எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் வெற்றி. இவர் ஆண்மகன் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

அதில் வெற்றியின் தந்தையாக பிரபு நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ண பிரியா இத்திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதைத்தொடர்ந்து வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம்தான் பகலறியான். இத்திரைப்படத்தில் வெற்றியுடன் சேர்ந்து அக்‌ஷயா கந்தமுதன் நாயகியாக நடித்துள்ளார். முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. விவேக் சரோ இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படம் கடந்த மே மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பகலறியான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ