Homeசெய்திகள்சினிமாதென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்... மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்...

தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…

-

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், இணைந்து இயக்குர் மாரி செல்வராஜ் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தெற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், வீடுகள் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நெல்லை நகர்ப்பகுதியில் மழை வெள்ளத்தால் கான்கிரீட் வீடு சில நொடிகளில் இடிந்து தரமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில்லு சில்லாக உடைந்துபோன வீட்டை கண்ட உரிமையாளர்கள் மனம் உடைந்து கதறிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதவிர, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணிகள், தண்ணீர் உணவின்றி கடும் அவதிக்கு ஆளாகினர். கிட்டத்தட்ட பல மணி நேரங்களாக ரயிலுக்குள்ளேயே சிக்கிய அவர்கள் ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஹெலிகாப்டன் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜூம் இணைந்து களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, கிராமங்களில் மீட்பு பணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ