இன்று திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!
மிஸ் யூ
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மிஸ் யூ. இந்த படத்தை ராஜசேகர் இயக்கியிருக்கிறார். 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (டிசம்பர் 13) திரைக்கு வந்துள்ளது.
சூது கவ்வும் 2
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ஹரிஷா, ராதாரவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனமும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (டிசம்பர் 13) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து அபிராமி, தலைவாசல் விஜய், கனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் முருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் (டிசம்பர் 13) இன்று திரைக்கு வந்துள்ளது.