விடுதலை 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 20 (நாளை) திரைக்கு வர இருக்கும் விடுதலை பாகம் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தை ஆர் எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசைய வைத்திருக்கிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, இளவரசு சேத்தன், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நீளம் கொண்டவை என்று சொல்லப்படுகிறது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த படத்தினை நாளை திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் இந்த படம் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.