Homeசெய்திகள்சினிமாவெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள்... நேரில் சந்தித்து நலம் விசாரித்த அஜித்...

வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள்… நேரில் சந்தித்து நலம் விசாரித்த அஜித்…

-

- Advertisement -

சென்னை வெள்ளத்தில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்ட நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை, அஜித்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மிக்ஜாம் புயல் எதிரொலியாக, சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்தது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியது. வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காரப்பாக்கத்தில் வசித்து வவும் நடிகர் விஷ்ணு விஷால் தன் வீட்டைச் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாகவும், வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வருவதாகவும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த செய்தி வெளியானதை அடுத்து மீட்பு குழுவினர் அவரையும், அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து அதே பகுதியில் வீடு எடுத்து வசித்து வரும் பாலிவுட் நடிகர் அமீர் கானையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி என நடிகர் விஷ்ணு விஷால் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் இருவரையும் நடிகர் அஜித்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பொது நண்பர் மூலம் தங்களின் நிலையை அறிந்து கொண்டு, உதவிக்கரம் நீட்டிய அஜித் தங்களின் பயணத்திற்கு உதவினார் என்று விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ