கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா
- Advertisement -
திருப்பத்தூர் மாவட்ட மலை கிராம மக்களுக்கு, கேபிஒய் பாலா இலவச ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளார்.

சின்னத்திரையில் புகழ்பெற்று விளங்ககியவர் கேபிஒய் பாலா. இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால், அவரது முகத்தை மக்களிடம் சேர்த்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் மூலம் பாலா மற்றும் புகழ் இருவருமே மக்களின் கவனத்தை ஈர்த்தனர். குறிப்பாக டைமிங் மற்றும் ரைமிங்கில் நகைச்சுவை செய்யும் பாலாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இதைத் தொடர்ந்து தற்போது திரைப்படங்களிலும் அதிகம் நடித்து வருகிறார்.

சினிமாவைத் தாண்டி நடிகர் பாலா, பொதுமக்களுக்கு உதவியும் செய்து வருகிறார். முதலில் ஈரோடு அருகே உள்ள மலைக்கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் அவதிப்படுவதை அறிந்த அவர், இலவசமாக அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். அடுத்து சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். மேலும், செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூர் பகுதி அருகே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் பாலா தற்போது மீண்டும் இலவச ஆம்புலன்ஸ் வழங்கி இருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு அவர் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இதைப் பெற்றுக் கொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.